குறள்: 253 26. புலால் மறுத்தல்

அறத்துப்பால்துறவறவியல்

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்உடல்சுவை யுண்டார் மனம்

மு. வரதராசனார் உரை

ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.

சாலமன் பாப்பையா உரை

கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.

மு. கருணாநிதி உரை

படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல

புலால் மறுத்தல் அதிகாரம் முழுவதும்