குறள்: 254 26. புலால் மறுத்தல்

அறத்துப்பால்துறவறவியல்

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்பொருளல்ல தவ்வூன் தினல்

மு. வரதராசனார் உரை

அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

சாலமன் பாப்பையா உரை

இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே

மு. கருணாநிதி உரை

கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும் எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது

புலால் மறுத்தல் அதிகாரம் முழுவதும்