குறள்: 256 26. புலால் மறுத்தல்

அறத்துப்பால்துறவறவியல்

தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்

மு. வரதராசனார் உரை

புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

சாலமன் பாப்பையா உரை

தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.

மு. கருணாநிதி உரை

புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்

புலால் மறுத்தல் அதிகாரம் முழுவதும்