குறள்: 257 26. புலால் மறுத்தல்

அறத்துப்பால்துறவறவியல்

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்புண்ண துணர்வார்ப் பெறின்

மு. வரதராசனார் உரை

புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.

சாலமன் பாப்பையா உரை

இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.

மு. கருணாநிதி உரை

புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்

புலால் மறுத்தல் அதிகாரம் முழுவதும்