குறள்: 258 26. புலால் மறுத்தல்
செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன்
மு. வரதராசனார் உரை
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை
பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.
மு. கருணாநிதி உரை
மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்