குறள்: 27 3. நீத்தார் பெருமை

அறத்துப்பால்பாயிரவியல்

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்வகைதெரிவான் கட்டே உலகு

மு. வரதராசனார் உரை

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

சாலமன் பாப்பையா உரை

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.

மு. கருணாநிதி உரை

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்

நீத்தார் பெருமை அதிகாரம் முழுவதும்