குறள்: 272 28. கூடா ஒழுக்கம்

அறத்துப்பால்துறவறவியல்

வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்தானறி குற்றப் படின்

மு. வரதராசனார் உரை

தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்.

சாலமன் பாப்பையா உரை

தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?

மு. கருணாநிதி உரை

தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை

கூடா ஒழுக்கம் அதிகாரம் முழுவதும்