குறள்: 271 28. கூடா ஒழுக்கம்
மு. வரதராசனார் உரை
வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.
வஞ்சமனம் கொண்டு உலகத்தாரை ஏமாற்றி வாழ்வு நடத்துவது பொய்ஒழுக்கமாம். இதை வள்ளுவர் கூடா ஒழுக்கம் எனக் குறிக்கிறார். மற்றவகைகளில் தான் ஈட்டிய ஒரு உயர்ந்த தோற்றத்தை வைத்து குற்றம் புரிபவன், தான் அஞ்சத்தக்கவன் எனக் காட்டிக்கொள்ள வல்லுருவம் பூண்டு ஊர்மேய்பவன், தவவேடத்தில் மறைந்திருந்து காமவேட்டையாடுபவன், புறத்தே செம்மையுடையராகக் காட்சி தந்து அகத்திலே பெருங்குறையுடையவன், மனத்திலே மாசை வைத்துக்கொண்டு மாட்சிமையுடையாராகக் காட்ட நீராடல் போன்ற சடங்குகளில் ஈடுபடுபவன், தோற்றத்தில் ஒன்று செய்கையில் முற்றிலும் மாறாக இருப்பவன் போன்ற இவர்கள் மற்றவர்களுக்குத் தெரியாவண்ணம் மறைந்திருந்து தீச்செயல்கள் புரிபவர்கள். இவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து மக்களை விழிப்பாக இருக்கச் செய்வதற்காக அமைந்தது கூடாஒழுக்கம் அதிகாரம் ஆகும். மறைவாகச் செய்கிறோம் என்று எண்ணுகிறார்கள்; ஆனால் இவர்களது படிற்றொழுக்கத்தை இயற்கை பார்த்துக்கொண்டு பதிவு செய்து கொண்டிருக்கிறதே!; 'என் செய்தோம் என் செய்தோம்!' என தன்னிரக்கமாக இவர்கள் பின்னால் புலம்பப் போகிறார்கள்; வஞ்சித்து வாழ்க்கை நடத்துபவரினும் கொடியவர் இல்லை; உலகம் பழித்தவைகளை விலக்கிவிட்டால் போதும்; வெளிவேடம் எதற்கு? இவை கூடாஒழுக்கம் பற்றிக் குறள் தரும் கருத்துக்கள்.
குறள்: 271 28. கூடா ஒழுக்கம்
வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.
குறள்: 272 28. கூடா ஒழுக்கம்
தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்.
குறள்: 273 28. கூடா ஒழுக்கம்
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.
குறள்: 274 28. கூடா ஒழுக்கம்
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.
குறள்: 275 28. கூடா ஒழுக்கம்
பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.
குறள்: 276 28. கூடா ஒழுக்கம்
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.
குறள்: 277 28. கூடா ஒழுக்கம்
புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.
குறள்: 278 28. கூடா ஒழுக்கம்
மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.
குறள்: 279 28. கூடா ஒழுக்கம்
நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.
குறள்: 280 28. கூடா ஒழுக்கம்
உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.