குறள்: 274 28. கூடா ஒழுக்கம்

அறத்துப்பால்துறவறவியல்

தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்துவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

மு. வரதராசனார் உரை

தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.

மு. கருணாநிதி உரை

புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை

கூடா ஒழுக்கம் அதிகாரம் முழுவதும்