குறள்: 275 28. கூடா ஒழுக்கம்

அறத்துப்பால்துறவறவியல்

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்றேதம் பலவுந் தரும்

மு. வரதராசனார் உரை

பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.

சாலமன் பாப்பையா உரை

எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.

மு. கருணாநிதி உரை

எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்

கூடா ஒழுக்கம் அதிகாரம் முழுவதும்