குறள்: 279 28. கூடா ஒழுக்கம்

அறத்துப்பால்துறவறவியல்

கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனைவினைபடு பாலாற் கொளல்

மு. வரதராசனார் உரை

நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.

மு. கருணாநிதி உரை

நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும் வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும் அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்

கூடா ஒழுக்கம் அதிகாரம் முழுவதும்