குறள்: 278 28. கூடா ஒழுக்கம்

அறத்துப்பால்துறவறவியல்

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடிமறைந்தொழுகு மாந்தர் பலர்

மு. வரதராசனார் உரை

மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.

சாலமன் பாப்பையா உரை

மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.

மு. கருணாநிதி உரை

நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்

கூடா ஒழுக்கம் அதிகாரம் முழுவதும்