குறள்: 281 29. கள்ளாமை
மு. வரதராசனார் உரை
பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.
தனக்கு உரிமையில்லாத மற்றவர் உடைமைகளை அவரறியாமல் கைக்கொள்ளவோ, வஞ்சித்து எடுத்துக் கொள்ளவோ, எண்ணாதிருத்தலும் அங்ஙனம் செய்யாதிருத்தலும் கள்ளாமை ஆகும். பொருள் ஈட்டுவதற்காக மறைந்தொழுகல் செய்யலாகாது என்பதைக் கள்ளாமை அதிகாரம் சொல்கிறது. சிறிதேயானாலும் களவாடக்கூடாது; களவுசெய்ய வேண்டும் என்று எண்ணுதலும் தீமையே; களவால் செல்வம் பெருகுவது போன்று தோன்றினாலும் அது அழிந்தே தீரும்; கண்டுபிடிக்கப்பட்டால் மிகுந்த துன்பத்தைத் தரும்; களவு செய்வார் அன்பில்லாதவராகவே இருப்பர்; அவர் வரம்புமீறிய வாழ்வு நடத்துவர்; இருள் அறிவு கொண்டவர்; களவின் சுவை கண்டவர் திரும்பவும் மாறுதல் கடினம்; மற்ற நல்ல தொழில்களைப் பயிலாதவர் நேரற்ற செயல்களையே புரிவர். ஆனால் கள்ளார் வானுலகமும் செல்லமுடியும். இவை இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் கூறும் செய்திகள். கள்ளாமையை ஒருவகை அறமாகவே கருதுகிறார் வள்ளுவர்.
குறள்: 281 29. கள்ளாமை
பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.
குறள்: 282 29. கள்ளாமை
குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.
குறள்: 283 29. கள்ளாமை
களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.
குறள்: 284 29. கள்ளாமை
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
குறள்: 285 29. கள்ளாமை
அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.
குறள்: 286 29. கள்ளாமை
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.
குறள்: 287 29. கள்ளாமை
களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
குறள்: 288 29. கள்ளாமை
அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.
குறள்: 289 29. கள்ளாமை
களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.
குறள்: 290 29. கள்ளாமை
களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.