குறள்: 284 29. கள்ளாமை

அறத்துப்பால்துறவறவியல்

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமந் தரும்

மு. வரதராசனார் உரை

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

மு. கருணாநிதி உரை

களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்

கள்ளாமை அதிகாரம் முழுவதும்