குறள்: 285 29. கள்ளாமை

அறத்துப்பால்துறவறவியல்

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்

மு. வரதராசனார் உரை

அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது.

மு. கருணாநிதி உரை

மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது

கள்ளாமை அதிகாரம் முழுவதும்