குறள்: 286 29. கள்ளாமை

அறத்துப்பால்துறவறவியல்

அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்கன்றிய காத லவர்

மு. வரதராசனார் உரை

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.

மு. கருணாநிதி உரை

ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்

கள்ளாமை அதிகாரம் முழுவதும்