குறள்: 287 29. கள்ளாமை

அறத்துப்பால்துறவறவியல்

களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்ஆற்றல் புரிந்தார்க ணில்

மு. வரதராசனார் உரை

களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.

மு. கருணாநிதி உரை

அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது

கள்ளாமை அதிகாரம் முழுவதும்