குறள்: 288 29. கள்ளாமை

அறத்துப்பால்துறவறவியல்

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்களவறிந்தார் நெஞ்சில் கரவு

மு. வரதராசனார் உரை

அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை

உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.

மு. கருணாநிதி உரை

நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்

கள்ளாமை அதிகாரம் முழுவதும்