குறள்: 290 29. கள்ளாமை

அறத்துப்பால்துறவறவியல்

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்தள்ளாது புத்தே ளுலகு

மு. வரதராசனார் உரை

களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.

சாலமன் பாப்பையா உரை

திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.

மு. கருணாநிதி உரை

களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது

கள்ளாமை அதிகாரம் முழுவதும்