குறள்: 291 30. வாய்மை

அறத்துப்பால்துறவறவியல்

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்தீமை யிலாத சொலல்

மு. வரதராசனார் உரை

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.

மு. கருணாநிதி உரை

பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்

வாய்மை அதிகாரம் முழுவதும்