குறள்: 281 29. கள்ளாமை

அறத்துப்பால்துறவறவியல்

எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்கள்ளாமை காக்கதன் நெஞ்சு

மு. வரதராசனார் உரை

பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.

மு. கருணாநிதி உரை

எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்

கள்ளாமை அதிகாரம் முழுவதும்