குறள்: 261 27. தவம்
மு. வரதராசனார் உரை
தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்
இவ்வதிகாரத்தில் முயற்சியே தவம்; தம் கருமம் செய்வதே தவம் என்கிறார் வள்ளுவர். அவர் சொல்லும் தவம் கடமை ஆற்றும் முயற்சியான் வரும் துன்பங்களை ஒரு நோன்பு போலத் தாங்கிக் கொள்ளுதலும் அம்முயற்சியில் வெற்றி காணும் நோக்கில் மற்றவர்களுக்கு ஊறு நேராவண்ணம் வாழ்வியல் மேற்கொள்ளலுமாம். தவம் என்பது துறவு மேற்கொண்டவர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல என்பது பெறப்பட்டது. குறளில் துறவற இயல் என்று வகுக்கப்பட்டதில் இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் பொதுவான அதிகாரங்கள் பல உள. அவற்றில் இதுவும் ஒன்று.
குறள்: 261 27. தவம்
தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்
குறள்: 262 27. தவம்
தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.
குறள்: 263 27. தவம்
துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ
குறள்: 264 27. தவம்
தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.
குறள்: 265 27. தவம்
விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.
குறள்: 266 27. தவம்
தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.
குறள்: 267 27. தவம்
புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்
குறள்: 268 27. தவம்
தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
குறள்: 269 27. தவம்
தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்
குறள்: 270 27. தவம்
ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.