குறள்: 264 27. தவம்

அறத்துப்பால்துறவறவியல்

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்எண்ணின் தவத்தான் வரும்

மு. வரதராசனார் உரை

தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை

பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும்.

மு. கருணாநிதி உரை

மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்

தவம் அதிகாரம் முழுவதும்