குறள்: 263 27. தவம்

அறத்துப்பால்துறவறவியல்

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்மற்றை யவர்கள் தவம்

மு. வரதராசனார் உரை

துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ

சாலமன் பாப்பையா உரை

துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.

மு. கருணாநிதி உரை

துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது

தவம் அதிகாரம் முழுவதும்