குறள்: 268 27. தவம்

அறத்துப்பால்துறவறவியல்

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனையமன்னுயி ரெல்லாந் தொழும்

மு. வரதராசனார் உரை

தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.

சாலமன் பாப்பையா உரை

தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.

மு. கருணாநிதி உரை

``தனது உயிர்'' என்கிற பற்றும், ``தான்'' என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்

தவம் அதிகாரம் முழுவதும்