குறள்: 269 27. தவம்

அறத்துப்பால்துறவறவியல்

கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

மு. வரதராசனார் உரை

தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்

சாலமன் பாப்பையா உரை

தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.

மு. கருணாநிதி உரை

எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்

தவம் அதிகாரம் முழுவதும்