குறள்: 267 27. தவம்

அறத்துப்பால்துறவறவியல்

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

மு. வரதராசனார் உரை

புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்

சாலமன் பாப்பையா உரை

நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.

மு. கருணாநிதி உரை

தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்

தவம் அதிகாரம் முழுவதும்