குறள்: 303 31. வெகுளாமை
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீயபிறத்தல் அதனான் வரும்
மு. வரதராசனார் உரை
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.
சாலமன் பாப்பையா உரை
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.
மு. கருணாநிதி உரை
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்