குறள்: 304 31. வெகுளாமை

அறத்துப்பால்துறவறவியல்

நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்பகையும் உளவோ பிற

மு. வரதராசனார் உரை

முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?

சாலமன் பாப்பையா உரை

முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?

மு. கருணாநிதி உரை

சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்

வெகுளாமை அதிகாரம் முழுவதும்