குறள்: 308 31. வெகுளாமை

அறத்துப்பால்துறவறவியல்

இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று

மு. வரதராசனார் உரை

பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை

பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.

மு. கருணாநிதி உரை

தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது

வெகுளாமை அதிகாரம் முழுவதும்