குறள்: 309 31. வெகுளாமை
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி யெனின்
மு. வரதராசனார் உரை
ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.
சாலமன் பாப்பையா உரை
உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.
மு. கருணாநிதி உரை
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்