குறள்: 319 32. இன்னா செய்யாமை

அறத்துப்பால்துறவறவியல்

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னாபிற்பகல் தாமே வரும்

மு. வரதராசனார் உரை

முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை

அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.

மு. கருணாநிதி உரை

பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்

இன்னா செய்யாமை அதிகாரம் முழுவதும்