குறள்: 311 32. இன்னா செய்யாமை
மு. வரதராசனார் உரை
சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.
பிற உயிர்கட்குத் துன்பம் உண்டாக்காமல் இருப்பது என்பது இன்னாசெய்யாமை ஆகும். அறஞ்சாரா நிலையில் பொருளை ஈட்டுவதும் பயன்படுத்துவதும் இன்பம் காண்பதும் ஆகாததுபோல், விலக்கத்தக்கனவற்றையும் செய்தல்கூடாது என்பதை வள்ளுவர் பல அதிகாரங்களில் கூறியுள்ளார். அவற்றுள் இன்னாசெய்யாமை என்ற அதிகாரம் ஒன்று. இவ்வதிகாரத்துடன் ஓரளவு தொடர்புடையது தீவினையச்சம் என்ற அதிகாரம். 'தீவினையச்சம்' தீச்செயல்களை அதாவது பாவச் செயல்களைச் செய்ய அஞ்சவேண்டும் எனக் கூறும்; 'இன்னாசெய்யாமை' பிற உயிர்கட்குத் தீங்கு செய்யாமல் இருக்க அறிவுறுத்துவது. இவ்விரு அதிகாரங்களும் பிறர்க்குத் தீமை செய்தவர் தீமையையே அடைவர் என்னும் கருத்தைக் கூறுகின்றன.
குறள்: 311 32. இன்னா செய்யாமை
சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.
குறள்: 312 32. இன்னா செய்யாமை
ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.
குறள்: 313 32. இன்னா செய்யாமை
தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.
குறள்: 314 32. இன்னா செய்யாமை
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
குறள்: 315 32. இன்னா செய்யாமை
மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.
குறள்: 316 32. இன்னா செய்யாமை
ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
குறள்: 317 32. இன்னா செய்யாமை
எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.
குறள்: 318 32. இன்னா செய்யாமை
தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.
குறள்: 319 32. இன்னா செய்யாமை
முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
குறள்: 320 32. இன்னா செய்யாமை
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.