குறள்: 315 32. இன்னா செய்யாமை

அறத்துப்பால்துறவறவியல்

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தந்நோய்போற் போற்றாக் கடை

மு. வரதராசனார் உரை

மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.

சாலமன் பாப்பையா உரை

அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?

மு. கருணாநிதி உரை

பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை

இன்னா செய்யாமை அதிகாரம் முழுவதும்