குறள்: 316 32. இன்னா செய்யாமை
இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமைவேண்டும் பிறன்கட் செயல்
மு. வரதராசனார் உரை
ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.
மு. கருணாநிதி உரை
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்