குறள்: 32 4. அறன் வலியுறுத்தல்
அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு
மு. வரதராசனார் உரை
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை
அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை
மு. கருணாநிதி உரை
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை