குறள்: 33 4. அறன் வலியுறுத்தல்
ஒல்லும் வகையான அறவினை ஓவாதேசெல்லும்வாய் எல்லாஞ் செயல்
மு. வரதராசனார் உரை
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.
மு. கருணாநிதி உரை
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்