குறள்: 34 4. அறன் வலியுறுத்தல்

அறத்துப்பால்பாயிரவியல்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்ஆகுல நீர பிற

மு. வரதராசனார் உரை

ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

சாலமன் பாப்பையா உரை

மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.

மு. கருணாநிதி உரை

மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை

அறன் வலியுறுத்தல் அதிகாரம் முழுவதும்