குறள்: 326 33. கொல்லாமை

அறத்துப்பால்துறவறவியல்

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்செல்லா துயிருண்ணுங் கூற்று

மு. வரதராசனார் உரை

கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.

சாலமன் பாப்பையா உரை

கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.

மு. கருணாநிதி உரை

கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்

கொல்லாமை அதிகாரம் முழுவதும்