குறள்: 327 33. கொல்லாமை

அறத்துப்பால்துறவறவியல்

தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிதின்னுயிர் நீக்கும் வினை

மு. வரதராசனார் உரை

தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை

தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.

மு. கருணாநிதி உரை

தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது

கொல்லாமை அதிகாரம் முழுவதும்