குறள்: 328 33. கொல்லாமை

அறத்துப்பால்துறவறவியல்

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்கொன்றாகும் ஆக்கங் கடை

மு. வரதராசனார் உரை

கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.

சாலமன் பாப்பையா உரை

வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.

மு. கருணாநிதி உரை

பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்

கொல்லாமை அதிகாரம் முழுவதும்