குறள்: 335 34. நிலையாமை

அறத்துப்பால்துறவறவியல்

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினைமேற்சென்று செய்யாப் படும்

மு. வரதராசனார் உரை

நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.

சாலமன் பாப்பையா உரை

நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

மு. கருணாநிதி உரை

வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்

நிலையாமை அதிகாரம் முழுவதும்