குறள்: 336 34. நிலையாமை
நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை யுடைத்திவ் வுலகு
மு. வரதராசனார் உரை
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
சாலமன் பாப்பையா உரை
நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.
மு. கருணாநிதி உரை
இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்