குறள்: 351 36. மெய்யுணர்தல்
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்மருளானாம் மாணாப் பிறப்பு
மு. வரதராசனார் உரை
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை
பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.
மு. கருணாநிதி உரை
பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது