குறள்: 353 36. மெய்யுணர்தல்

அறத்துப்பால்துறவறவியல்

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வான நணிய துடைத்து

மு. வரதராசனார் உரை

ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா உரை

சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.

மு. கருணாநிதி உரை

ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்

மெய்யுணர்தல் அதிகாரம் முழுவதும்