குறள்: 358 36. மெய்யுணர்தல்

அறத்துப்பால்துறவறவியல்

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்செம்பொருள் காண்ப தறிவு

மு. வரதராசனார் உரை

பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

சாலமன் பாப்பையா உரை

பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

மு. கருணாநிதி உரை

அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்

மெய்யுணர்தல் அதிகாரம் முழுவதும்