குறள்: 364 37. அவா அறுத்தல்

அறத்துப்பால்துறவறவியல்

தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றதுவாஅய்மை வேண்ட வரும்

மு. வரதராசனார் உரை

தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை

மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌.

மு. கருணாநிதி உரை

தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்

அவா அறுத்தல் அதிகாரம் முழுவதும்