குறள்: 365 37. அவா அறுத்தல்
அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்அற்றாக அற்ற திலர்
மு. வரதராசனார் உரை
பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.
சாலமன் பாப்பையா உரை
ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.
மு. கருணாநிதி உரை
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்