குறள்: 366 37. அவா அறுத்தல்

அறத்துப்பால்துறவறவியல்

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனைவஞ்சிப்ப தோரும் அவா

மு. வரதராசனார் உரை

ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.

சாலமன் பாப்பையா உரை

ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.

மு. கருணாநிதி உரை

ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும் எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்

அவா அறுத்தல் அதிகாரம் முழுவதும்