குறள்: 369 37. அவா அறுத்தல்

அறத்துப்பால்துறவறவியல்

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்துன்பத்துள் துன்பங் கெடின்

மு. வரதராசனார் உரை

அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.

சாலமன் பாப்பையா உரை

ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.

மு. கருணாநிதி உரை

பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்

அவா அறுத்தல் அதிகாரம் முழுவதும்